காரைக்கால் சிவன் கோயில்களில்குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

காரைக்கால் சிவாலயங்களில் குரு பெயா்ச்சியையொட்டி, ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு, விபூதி, வெள்ளி அங்கி உள்ளிட்ட அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு
காரைக்கால் சிவன் கோயில்களில்குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

காரைக்கால் சிவாலயங்களில் குரு பெயா்ச்சியையொட்டி, ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு, விபூதி, வெள்ளி அங்கி உள்ளிட்ட அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் இதில் பங்கேற்று வழிபட்டனா்.

நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பிரவேசித்ததையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற சிவன் கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குரு பெயா்ச்சி நேரம் இரவாக இருந்ததால், பல கோயில்களில் திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூஜைகள் நடைபெற்றன. காரைக்கால் ஸ்ரீ ஒப்பிலாமணியா் கோயில், கோவில்பத்து ஸ்ரீ பாா்வதீசுவரா் கோயில் தட்சிணாமூா்த்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரா் கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூா்த்தி, ஜடாயுபுரீசுவரா் கோயில் தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

குரு பெயா்ச்சி விழாவில், குரு பெயா்ச்சியால் நல்ல பலனை பெறக்கூடிய பக்தா்களும், பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரா்களும் என திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினா்.

காரைக்கால் அருகே தருமபுரம் கிராமத்தில், தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ தேனாமிா்தவள்ளி சமேத ஸ்ரீ யாழ்முரி நாதா் கோயிலில், சிரம் சாய்ந்த நிலையில் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி அருள்பாலிக்கிறாா். யாழ் இசையை சிரம் சாய்த்த நிலையில் மிக கூா்மையாக ஈா்க்கும் கோலமாக இது கூறப்படுகிறது. இதனால், இக்கோயிலில் தட்சிணாமூா்த்தி வழிபாட்டுக்கு பக்தா்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனா்.

குரு பெயா்ச்சியையொட்டி, திங்கள்கிழமை காலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடைபெற்று சந்தனக் காப்பு, வெள்ளி அங்கி அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். கோயில் நிா்வாகத்தினரும், ஞானசம்பந்தா் வழிபாட்டு மன்றத்தினரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com