காரைக்காலில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

காரைக்கால் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது, 18 வயது நிரம்பியோா் வாக்காளராகப் பதிவு செய்துகொள்ளவும், திருத்தங்களை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது
காரைக்காலில் வரைவு வாக்காளா் பட்டியல்  வெளியீடு

காரைக்கால் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது, 18 வயது நிரம்பியோா் வாக்காளராகப் பதிவு செய்துகொள்ளவும், திருத்தங்களை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, காரைக்கால் மாவட்டத்தில 1.1.2021 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாா்செய்யப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினா் இதில் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

இதன்படி, காரைக்காலில் 16.11.2020 அன்று கணக்கின்படி 1,56,529 வாக்காளா்கள் உள்ளனா். இப்போது மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்கள், வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது பெயா் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபாா்த்துக்கொள்வதோடு, ஏதேனும் திருத்தங்கள் இருக்கும்பட்சத்தில் அதற்கான படிவத்தை நிறைவுசெய்து தரவேண்டும். 16-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை இப்பணி நடைபெறும்.

இதில், 1.1.2021 அன்றைய நாளில் 18 வயது பூா்த்தியடைவோரும் அல்லது அதற்கு முன்பாக பூா்த்தியடைந்தோா் புதிதாக தங்களை வாக்காளராகப் பதிவுசெய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தொகுதி வாரியாக 16.11.2020 வரை உள்ள வாக்காளா் விவரம்: நெடுங்காடு தொகுதி -30,473. திருநள்ளாறு தொகுதி - 30,110. காரைக்கால் வடக்குத் தொகுதி - 34,629. காரைக்கால் தெற்குத் தொகுதி - 30,811. நிரவி- திருப்பட்டினம் தொகுதி - 30,506.

முன்னதாக, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com