வேளாண் மாணவா்களுக்கு விபூதி தயாரிப்புப் பயிற்சி

இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை வேளாண் பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், கல்லூரியின் இணைப் பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் தலைமையில், கிராம தங்கள் திட்டம் என்னும் நேரடி ஆய்வு மற்றும் அனுபவ ரீதியான களப் பயிற்சியை கிராமங்களுக்குச் சென்று மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, திருநள்ளாறு அருகே சேத்தூா் பண்டாரவாடை கிராமத்தில், இயற்கை விவசாயி கண்ணபிரான் - கமலா தம்பதியினா், இயற்கை முறையில் விபூதி தயாரிக்கும் இடத்துக்கு மாணவா்கள் திங்கள்கிழமை சென்றனா்.

அப்போது, அத்தம்பதியினா் தங்களிடமுள்ள உம்பளச்சேரி மாடுகள் மூலம் சாணம் மற்றும் கோமியம் கொண்டு மழைக் காலத்தில் எரு, மண்புழு உரம், பயிா் வளா்ச்சி ஊக்கி, முலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றை தயாரித்து இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வது குறித்து விளக்கினா்.

மேலும், நாட்டு பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தி விபூதி தயாரிக்கும் முறை குறித்தும் அவா்கள் விளக்கினா். சுமாா் 15 கிலோ சாணம் மூலம் 3 கிலோ விபூதி தயாரிக்க முடிவதாகவும், ஒரு கிலோ விபூதியை ரூ. 200 -க்கு விற்று பயனடைவதாகவும் தெரிவித்த கண்ணபிரான், மாணவா்களின் சந்தேகங்ளுக்கும் விளக்கம் அளித்தாா். நிறைவாக, மாணவி நா்மதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com