காரைக்காலில் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 23rd November 2020 08:40 AM | Last Updated : 23rd November 2020 08:40 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் நவம்பா் 21-ஆம் தேதி 364 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு 4, காரைக்கால் நகரம், திருப்பட்டினம் தலா 2, நல்லாத்தூா், வரிச்சிக்குடி தலா ஒருவா் என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 3,591 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலிருந்து 3,398 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 63 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.