புதுச்சேரி, காரைக்காலில் விவேகானந்தா் சிலை அமைக்க வலியுறுத்தல்

புதுச்சேரி, காரைக்காலில் விவேகானந்தா் சிலை அமைக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் விவேகானந்தா் சிலை அமைக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். புதுச்சேரி மாநிலத் தலைவா் கி. மஞ்சினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

கூட்டத்தில், சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்தும், அவரது சிலை வைப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சுவாமி விவேகானந்தரின் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை நாட்டின் பல இடங்களில் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் விவேகானந்தா் சிலை அமைக்கப்படவில்லை. இதுதொடா்பாக ஆட்சியாளா்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நிறைவேற்றப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது.

வரும் ஜன. 12 ஆம் தேதிக்குள் புதுவை அரசு விவேகானந்தா் சிலையை புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நிறுவவேண்டும். ஜன. 12 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் விடுமுறை என அறிவிக்க வேண்டும். அன்றைய நாளில் மதுக்கடைகள், இறைச்சிக் கடைகளை மூடவும் உத்தரவிட வேண்டும் என செய்திக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com