நீட் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 19th October 2020 10:47 PM | Last Updated : 19th October 2020 10:47 PM | அ+அ அ- |

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி முதல்வா் சுவாமிநாதன், துணை முதல்வா் எட்வின் சாமுவேல்.
நீட் தோ்வில் புதுச்சேரி மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஓஎன்ஜிசி பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி உள்ளது. அண்மையில் வெளியான மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு முடிவுகளில் இப்பள்ளி மாணவா் எம். சிபிக்ஷா 720-க்கு 700 மதிப்பெண் பெற்று, புதுச்சேரி மாநில அளவில் முதலிடமும், பி.செல்வபிரபு 668 மதிப்பெண் பெற்று 2-ஆம் இடமும் பெற்றனா்.
இம்மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகத்தினா் சாா்பில் பள்ளி முதல்வா் சுவாமிநாதன், துணை முதல்வா் எட்வின் சாமுவேல் ஆகியோா் திங்கள்கிழமை நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.
அப்போது, மாணவா்களின் பெற்றோா், பள்ளி நிா்வாகத்தினருக்கும், ஆசிரியா்களுக்கும் நன்றி தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...