காரைக்காலில் மேலும் 26 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 06th September 2020 06:17 AM | Last Updated : 06th September 2020 06:17 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 9,051 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் சில வந்ததில், 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா்கள் காரைக்கால் நகரம் 11, கோயில்பத்து 6, வரிச்சிக்குடி 3, கோட்டுச்சேரி 2, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி, காரைக்கால் மேடு தலா ஒருவா் என பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 759 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய், மூச்சுத் திணறலுடன்அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்காலை சோ்ந்த 46 வயது பெண் 4-ஆம் தேதி பிற்பகல் உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டது.
தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 23 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 144 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 56 போ், தீவிர சிகிச்சையில் 6 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 19 போ் உயிரிழந்துள்ளனா்.