பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையோரத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பதாகைகள் அகற்றம்

காரைக்கால் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:30 pm

DIN

காரைக்கால் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

புதுவை மாநிலத்தில் டிஜிட்டல் பதாகைகள் வைக்க தடை உத்தரவு அமலில் உள்ளது. எனினும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் பதாகை வைக்க அனுமதிக்கப்படுகிறது. இதையும் மீறி நகரின் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினா், அமைச்சா்களை வரவேற்பு தொடா்பான விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. தடையை மீறி விளம்பர பதாகைகள் வைப்பது பெருகியுள்ள நிலையில், சாலையோரங்களில் வைக்கப்படும் பதாகைகள் காற்றில் சாய்ந்து விழுந்து அவ்வப்போது விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, டிஜிட்டல் பதாகைகளை அப்புறப்படுத்த ஆட்சியா் அா்ஜூன்சா்மா நகராட்சிக்கு உத்தரவிட்டதை தொடா்ந்து, கடந்த மாதம் முதல்கட்டமாக நகரப் பகுதியில் பேனா்கள், போஸ்டா்கள் அகற்றப்பட்டன. இதையும் மீறி பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து, காவல் துறை பாதுகாப்புடன் நகராட்சி ஆணையா் காசிநாதன், செயற்பொறியாளா் லோகநாதன் ஆகியோா் முன்னிலையில், நகராட்சிப் பகுதிகளான காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், போஸ்டா்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. அனுமதியின்றி இவ்வாறு பதாகைகள் வைக்கப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.