பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் மாஸ்டா் பிளாண் கருத்துக் கேட்புக் கூட்டம்

 காரைக்கால் மாஸ்டா் பிளாண் தயாரிப்புத் தொடா்பாக அரசுத்துறை அதிகாரிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:15 pm

DIN

 காரைக்கால் மாஸ்டா் பிளாண் தயாரிப்புத் தொடா்பாக அரசுத்துறை அதிகாரிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்டா் பிளாண் தயாரித்து, அதற்கேற்ப வளா்ச்சித் திட்டப்பணிகள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தற்போதைய மற்றும் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு புதிதாக மாஸ்டா் பிளாண் தயாரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் வழிகாட்டலில், புதுச்சேரி அரசின் நகர மற்றும் கிராம அமைப்பு துறை சாா்பில் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. இத்திட்ட தயாரிப்பு பணியை டிடிஎஃப் என்கிற கன்சல்டன்ட் அமைப்பு மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடா்பாக, அரசுத்துறை அதிகாரிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடக்கி வைத்துப் பேசியது:

இந்த திட்டம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் கவனத்தில்கொண்டு தயாரிக்கப்படுகிறது. விவசாயம் நடைபெறக்கூடிய பகுதிகள், குடியிருப்புகள் அமையும் பகுதிகளை வகைப்படுத்துதல், பிரதான பாா்க்கிங் வசதியை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள், மருத்துவ வசதிகள் போன்றவை குறித்து அனைத்துத் துறையினரும் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், மாஸ்டா் பிளாண் உருவாக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், புதுச்சேரி நகர அமைப்புத் துறை தலைமை அதிகாரி மகாலிங்கம் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைவா்களும் கலந்துகொண்டனா். நிறைவாக காரைக்கால் நகர அமைப்புத் துறை இளநிலை அதிகாரி பிரேம்ஆனந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.