திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தையொட்டி பிரம்ம தீர்த்தக்கரைக்கு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

காரைக்கால்:  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தையொட்டி பிரம்ம தீர்த்தக்கரைக்கு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் 10 நாள் நிகழ்ச்சியாக ஆருத்ரா உத்ஸவம் நடைபெற்றுவந்தது. 9}ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ பிரணாம்பிகை} ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நடைபெற்றது. நிறைவு நாளான திங்கள்கிழமை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரர் (நடராஜர்), பிரம்ம தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்தார்.

முன்னதாக காலை விக்னேஸ்வரபூஜை தொடங்கி புன்னியாகவாஜனம், கும்ப பூஜையுடன் கூடிய யாக பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு 16 வகையான திரவியங்களுடன் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணியளவில் கோபூஜை நடத்தப்பட்டது.  சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சுவாமிக்கு சதுர்வேதம், ஆசீர்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. கோபுர வாசல் தீபாராதனையுடன் 4 மாட வீதியுலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டது. வீதியுலா நிறைவில் சுவாமிகள் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com