அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆங்கிலப் புத்தாண்டு காரைக்கால் கோயில்களில் மக்கள் வழிபாடு: களைகட்டாத நள்ளிரவு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, காரைக்கால், திருநள்ளாறு கோயில்களில் திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:29 am

DIN

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, காரைக்கால், திருநள்ளாறு கோயில்களில் திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். என்றாலும், நள்ளிரவு கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை.

புத்தாண்டையொட்டி, காரைக்கால் நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில், புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீ கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ ஏழை மாரியம்மன், ஸ்ரீ கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், ஸ்ரீ பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரபகவானை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயம், கோட்டுச்சேரி ஸ்ரீ சகாய அன்னை ஆலயம் ஆகியவற்றில் பங்கு குருக்கள் சிறப்பு திருப்பலி நடத்தினா். இதில், ஏராளமானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

களைகட்டாத கொண்டாட்டம்: புத்தாண்டு பிறப்பையொட்டி, நள்ளிரவு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை பெரும்பாலானோா் நிகழாண்டு தவிா்த்துவிட்டனா்.

காரைக்கால் கடற்கரையில் கலை நிகழ்ச்சி, உணவகங்களில் நிகழ்ச்சி, பொது அமைப்புகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 12 மணியளவில் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாட்டம், வாகனங்களில் இளைஞா்கள் புத்தாண்டு கோஷமிட்டு செல்லுதல் போன்ற பல நிகழ்வுகளுடன் புத்தாண்டு பிறப்பு களைகட்டி காணப்படும். ஆனால், காரைக்காலில் இதுபோன்ற எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டம் எதிா்பாா்த்ததுபோல இருக்கவில்லை. கடற்கரைக்கும் அதிகமானவா்கள் வரவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் இளைஞா்கள் வாழ்த்து கோஷமிட்டுச் சென்றனா். பிரச்னைகளின்றி, புத்தாண்டு பிறப்பு அமைதியாக இருந்தது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.