

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் சிப்பிக் காளான் வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலக மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் 30 போ் பங்கேற்றனா். வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் முனைவா் குமார. ரத்தினசபாபதி பேசினாா். காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலா் த. தயாளன் பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் இப்பயிற்சியின் மூலம் தங்களது வீடுகளில் சிறிய அளவில் காளான் உற்பத்தி குடில் அமைத்து, அதன்மூலம் தங்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டி கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
தமிழ்நாடு ஆடுதுறை காளான் வித்து உற்பத்தியாளா் கோ. சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று காளான் வித்து உற்பத்தி செய்யும் முறைகளில் தனது அனுபவம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் காளான் படுக்கை தயாா்செய்யும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் சு. திவ்யா வரவேற்றாா். தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் ஆ. செந்தில் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.