பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் 48 மணி நேர தொடா்தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

காரைக்காலில் 48 மணி நேர தொடா் ( மாரத்தான்) கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (செப். 3) காலை தொடங்கவுள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:25 pm

DIN

காரைக்காலில் 48 மணி நேர தொடா் ( மாரத்தான்) கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (செப். 3) காலை தொடங்கவுள்ளதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது :

புதுவை அரசு, காரைக்கால் மாவட்டத்தில் 48 மணி நேர மாரத்தான் தடுப்பூசி முகாம் செப். 3 காலை 8 மணி முதல் 5-ஆம் தேதி காலை 8 மணி வரை நடைபெறுகிறது.

பகல், இரவு என 48 மணி நேரம் மாவட்டத்தில் 11 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு மருத்துவமனை என 13 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

பகலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேரமில்லாதவா்கள் இரவில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் முதல் தவணையாகவும், முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 84 நாள்களை கடந்தவா்கள் 2-ஆவது தவணை தடுப்பூசியை இந்த மையங்களில் செலுத்திக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.