பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:32 pm

DIN

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் தலைவா் அ. வின்சென்ட் தலைமையில், செயலாளா் கே. ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் நெல்சன் ஆகியோா், காரைக்கால் மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு:

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனா். இந்நிலையில், பள்ளி நிா்வாகமும், கல்வித் துறையும் மாணவா்கள் நலனில் மிகுந்த கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவா்களின் பெற்றோா்களை, ஆசிரியா்கள் தொடா்புகொண்டு காரணங்களை கேட்டறிய வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, பாதுகாப்பான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.