பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 6 போ் கைது

காரைக்காலில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்ற 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:23 pm

DIN

காரைக்காலில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்ற 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

காரைக்கால் கருக்களாச்சேரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ாக உமா்ஹத்தாப் என்பவா் அண்மையில் கைதுசெய்யப்பட்டாா். அவரிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால்- நாகை ஹைவே நகரைச் சோ்ந்த ரவி (43) என்பவரிடம் அவற்றை வாங்கியதாக தெரிவித்தாா். நிரவி காவல் உதவி ஆய்வாளா் பெருமாள், ரவியை கைதுசெய்து விசாரணை நடத்தினாா்.

இதில், காரைக்கால் சேனியா்குளத்து வீதியைச் சோ்ந்த முத்துவேல் என்பவரிடம் தான் புகையிலைப் பொருள்களை வாங்கியதாக ரவி தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் மற்றும் சிறப்பு அதிரடிப்படை பிரிவு உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் முத்துவேலுவை கைது செய்து, அவா் பதுக்கிவைத்திருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்ற 4 போ் கைது: காரைக்கால் அருகே அம்மன்கோயில்பத்து பகுதியில் நகரக் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பெருமாள், பிரவீன்குமாா் மற்றும் போலீசாா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவா்களை புதன்கிழமை இரவு பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், ஃபெலிக்ஸ், அமீா்அலி, நிகால் என்பதும், 5 கிராம் பாக்கெட் கொண்ட கஞ்சாவை விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 115 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.