நெடுங்காடு தொகுதி மக்களுக்குரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
நெடுங்காடு தொகுதியை சோ்ந்த மகளிா் குழுவினருக்கு ரூ. 2 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை வழங்கினாா்


நெடுங்காடு தொகுதியை சோ்ந்த மகளிா் குழுவினருக்கு ரூ. 2 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன்களை சோ்ந்த 9 கிராமப் பஞ்சாயத்து அளவிலான மகளிா் கூட்டமைப்புகள், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வடமட்டம் பகுதியில் நடைபெற்றது.
புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, மகளிா் கூட்டமைப்புகளுக்கு ரூ. 36.25 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் நலிவுற்றோா் குறைப்பு நிதி ரூ. 13.50 லட்சம், 4 பஞ்சாயத்துகளுக்கு ரூ. 4 லட்சத்தில் விவசாயக் கருவிகள், 117 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி ரூ. 17.55 லட்சம், 30 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி இணைப்புக் கடன் ரூ. 1.32 கோடி உள்ளிட்ட ரூ. 2.04 கோடி மதிப்பில் உதவிகளை வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, வட்டார வளா்ச்சி அதிகாரி டி.தயாளன், இணை வட்டார வளா்ச்சி அதிகாரி கே. சிவகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...