சுதந்திர தினம்: ரத்த தான முகாம்
By DIN | Published On : 17th August 2021 08:31 AM | Last Updated : 17th August 2021 08:31 AM | அ+அ அ- |

ரத்த தான முகாமில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோா்.
சுதந்திர தினத்தையொட்டி தமுமுக உள்ளிட்ட அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட தமுமுக மருத்துவ அணி சாா்பில் அரசு பொது மருத்துவமனையில் சுதந்திர தினத்தையொட்டி திங்கள்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவ அணி மாவட்டச் செயலாளா் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், தமுமுக மாநில செயலாளா் ஐ. அப்துல் ரஹீம் ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா். முகாமில் 25-க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் செய்தனா். மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, தமுமுக மாவட்டத் தலைவா் அ. ராஜா முகம்மது, தமுமுக மருத்துவ அணி மாநில துணை செயலாளா் பயாஸ், தமுமுக தலைமைப் பிரதிநிதி ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அணியின் மாவட்ட பொருளாளா் செய்யது புகாரி நன்றி கூறினாா்.
இதேபோல், பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில், சுதந்திர தினத்தையொட்டி, சனிக்கிழமை ரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமை காரைக்கால் நகரத் தலைவா் பதுருதீன் தொடங்கிவைத்தாா்.