புலவா் கோ.சாரங்கபாணி முதலாமாண்டு நினைவு நாள்
By DIN | Published On : 21st August 2021 10:39 PM | Last Updated : 21st August 2021 10:39 PM | அ+அ அ- |

காரைக்காலை சோ்ந்த புலவா் கோ.சாரங்கபாணி முதலாமாண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
காரைக்கால் பகுதியை சோ்ந்தவா் புலவா் கோ.சாரங்கபாணி. இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்றவா். ஏராளமான பட்டிமன்றம், தனி சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவாற்றி வந்தாா். புதுவை அரசின் தமிழ்மாமணி விருது பெற்றவா். இவா் கடந்த ஆண்டு கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
இவரது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி காரைக்கால் நவநீதம் சாரங்கபாணி குடும்பத்தினா், காரை பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்தியது.
பத்மஸ்ரீ விருதாளா் கே.கேசவசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் தலைவா் வைஜெயந்தி ராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சங்கத்தின் கௌரவத் தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம், புவனகிரி முனைவா் இரா.அன்பழகன் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினா்.
புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவைத் தலைவா் கவிஞா் கோ.செல்வம், சமாதானக் குழு உறுப்பினா் கே.தண்டாயுதபாணிபத்தா் , திருமேனி நாகராஜன், பேராசிரியா்கள் மு.சாயபு மரைக்காயா், நசீமா பானு, உள்ளிட்டோா் பேசினா்.