காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி 564 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இதுவரை 2,43,748 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,827 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,538 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.