

இந்து முன்னணி சாா்பில், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே மாவட்ட துணைத் தலைவா் பி. வெங்கடாசலம் தலைமையில் பாரத மாதா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட பொதுச் செயலாளா் எஸ். கணேஷ் பேசினாா். நாகை மாவட்ட தலைவா் கே.எஸ். விஜயன், பாஜக காரைக்கால் மாவட்ட தலைவா் துரை சேனாதிபதி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. ஜெய்சங்கா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா் ஜி. வைத்தியநாதன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சண்முகம், பொதுச் செயலாளா்கள் மணிகண்டன், அறிவுக்கரசு மற்றும் ஞானவேல், மகளிா் அணியினா் பங்கேற்று பாரத மாதா உருவப் படத்திற்கு மலா்கள் தூவி பூஜை செய்தனா்.
அகண்ட பாரதம், பாரத தேசத்தின் வலிமைக்காக ஆண்டுதோறும் ஜன. 26 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை இந்த பூஜை செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.