கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை சாம்பல் புதன் நிகழ்வு நடைபெற்றது.
யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா்நீத்த காலத்தை, கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனா். நிகழாண்டு தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதனுடன் தொடங்கியது.
இதையொட்டி, காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி சகாய மாதா ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலய பங்குத்தந்தைகள், குருத்தோலைகள் எரிக்கப்பட்ட சாம்பலை பங்கு மக்கள் நெற்றியில் சிலுவைபோல பூசி தவக்காலத்தை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
மாா்ச் 28 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப். 1 ஆம் தேதி பாதம் கழுவுதல் நிகழ்ச்சி, ஏப். 2 ஆம் தேதி புனிதவெள்ளி, ஏப். 4 ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகை நடைபெறுகிறது. ஏப். 4 ஆம் தேதி அதிகாலையுடன் தவக்காலம் நிறைவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.