காரைக்காலில் 3 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th February 2021 10:52 PM | Last Updated : 20th February 2021 10:52 PM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்காலில் வெள்ளிக்கிழமை 412 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகளின்படி கோயில்பத்து 2, நிரவியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதுவரை 83,991 பரிசோதனை செய்யப்பட்டதில், 3,967 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,877 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் நிலையாக, சுகாதாரப் பணியாளா்கள் 481 போ், முன்களப் பணியாளா்கள் 54 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 32 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.