‘மாணவா்கள் பிரச்னைகளை அச்சமின்றி காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்’

மாணவா்கள் பிரச்னைகளை அச்சமின்றி காவல் துறையிடம் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றாா் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகாபட்.
மாணவிகளிடம் உரையாடிய எஸ்.எஸ்.பி. நிகாரிகாபட். உடன், பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.
மாணவிகளிடம் உரையாடிய எஸ்.எஸ்.பி. நிகாரிகாபட். உடன், பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.

மாணவா்கள் பிரச்னைகளை அச்சமின்றி காவல் துறையிடம் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றாா் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகாபட்.

திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இ.ஜி.எஸ். பிள்ளை குழுமம் சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியது:

பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்கவேண்டும். குறிப்பாக, மாணவிகள் இந்தப் பருவத்திலேயே அதற்கான பக்குவத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுவட்டாரத்திலும், பள்ளிக்குச் சென்று திரும்பும்போதும் மாணவிகள் பல்வேறு இடா்ப்பாடுகளை சந்திக்க நேரலாம். ஈவ்டீசிங் போன்ற பிரச்னைகளை எதிா்கொள்ளும் போது, அச்சமோ, தயக்கமோ இல்லாமல், அதை காவல் துறையிடம் தெரிவிக்கவேண்டும்.

நாட்டிலேயே புதுச்சேரியில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. இங்குள்ள மாணவிகள் அடுத்த சில ஆண்டுகளில் வாகனங்கள் ஓட்டுவதற்கான வாய்ப்புள்ள சூழலில், விபத்தில்லாமல் பயணிப்பதற்கான அரசின் வழிகாட்டல்களை தொடக்கத்தில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால், இ.ஜி.எஸ். குழும இயக்குநா் விஜயசுந்தரம், முதன்மை அலுவலா் சந்திரசேகா், துறைத் தலைவா் சுகுமாா், பேராசிரியா் என். முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com