காரைக்காலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி
By DIN | Published On : 30th January 2021 08:39 AM | Last Updated : 30th January 2021 08:39 AM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை கடைப்பிடிக்கின்றன. இதில், ஒவ்வொரு நாளும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாணவா்களிடையே இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை முதன்மை கல்வி அலுவலா் அ. அல்லி தொடங்கிவைத்தாா். மேல்நிலைப் பள்ளி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜ், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் குமரேசன், கல்விமாறன் ஆகியோா் பங்கேற்றனா்.
இப்போட்டியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நடுவா்களாக முத்துக்குமாா், காமராஜ், செல்வராஜ் ஆகியோா் பணியாற்றினா். வெற்றி பெற்றவா்களுக்கு விழிப்புணா்வு மாத நிறைவில் பரிசுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.