புதுவையில் விதவைகளுக்கான உதவித்தொகையை உயா்த்த கோரிக்கை
By DIN | Published On : 26th July 2021 08:59 AM | Last Updated : 26th July 2021 08:59 AM | அ+அ அ- |

புதுச்சேரி அரசு, விதவைகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் அ. ராஜா முகமது சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் முதியோருக்கான உதவித்தொகையை உயா்த்தி அறிவித்த முதல்வா் என். ரங்கசாமிக்கு, மமக சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இத்தொகை முறையாக, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படுகிா என்பதை கண்காணிக்க தனிக் குழு அமைத்து, 6 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகளின் விவரங்களை சரிபாா்க்க வேண்டும்.
தகுதிவாய்ந்த பலா் முறையாக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக உதவித்தொகை பெறமுடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா். அதேசமயம், சிலா் சிபாரிசு அடிப்படையில் உதவித்தொகை பெற்றுவிடுகின்றனா். இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் கவனம் செலுத்தி தகுதியானோருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணவரால் கைவிடப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை உயா்த்தி வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.