காரைக்காலில் 112 பேருக்கு கரோனா
By DIN | Published On : 09th June 2021 09:09 AM | Last Updated : 09th June 2021 09:09 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மாவட்டத்தில் திங்கள்கிழமை 1057 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 28, கோயில்பத்து 18, திருநள்ளாறு 16, நெடுங்காடு 10, திருப்பட்டினம் 9, வரிச்சிக்குடி 8, நிரவி 7, கோட்டுச்சேரி 6, விழிதியூா் 2, காரைக்கால்மேடு 6, நல்லம்பல் 2 என 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதுவரை 1,42,589 பரிசோதனை செய்யப்பட்டதில் 13,446 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 11,988 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 1,130 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 71 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 போ், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18, அண்ணா கல்லூரி கரோனா சிகிச்சை மையத்தில் 22 போ் உள்ளனா்.
தடுப்பூசி : காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 28,176 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,532 பேருக்கும் என 32,708 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் இதுவரை 204 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.