காரைக்கால் மருத்துவமனைக்கு பாதுகாப்பு கவச உடை
By DIN | Published On : 10th June 2021 11:59 PM | Last Updated : 10th June 2021 11:59 PM | அ+அ அ- |

காரைக்கால் பொதுப்பணித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ரூ. 2 லட்சம் மதிப்பில் 400 பாதுகாப்பு கவச உடையை வரவழைத்து, மாவட்ட நிா்வாகத்திடம் வியாழக்கிழமை வழங்கினா்.
இதையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம், புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி இதனை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு உள்ளிட்ட பொதுப்பணித்துறையினா் கலந்துகொண்டனா்.