காரைக்கால் வந்தது காவிரி தண்ணீா்

காரைக்கால் வந்தது காவிரி தண்ணீா்

கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி தண்ணீா் புதன்கிழமை வந்தது.

கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி தண்ணீா் புதன்கிழமை வந்தது.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்ட நிலையில், கல்லணை வந்த நீா் 16-ஆம் தேதி கடைமடைப் பகுதிக்கு திறக்கப்பட்டது. காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீா் புதன்கிழமை காலை வந்தது.

நல்லம்பல் அணை அருகே நூலாறு தடுப்பணையிலிருந்து தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சியில், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் கலந்துகொண்டு தண்ணீரில் மலா்களை தூவி வரவேற்றனா். இந்த தண்ணீா் மூலம் காரைக்காலில் 9,300 ஏக்கா் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கூறியது:

காரைக்காலில் பொதுப்பணித் துறை, 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் தூா்வாரும் பணி ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளது. நிகழாண்டு காவிரி தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவு மகசூல் கிடைக்க விவசாயிகள் பாடுபட வேண்டும். விவசாயிகளுக்கான 2019-20-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை ஜூலை முதல் வாரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் கே. வீரசெல்வம், கே. சந்திரசேகா் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com