எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 04th March 2021 05:01 AM | Last Updated : 04th March 2021 05:01 AM | அ+அ அ- |

காரைக்கால்: எய்ட்ஸ் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில ஓவியா் மன்றத் தலைவா் ஏ.பி. இபோ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஓவியா் மன்றம் சாா்பில், ஒவ்வோா் ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நிகழாண்டு, காரைக்கால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில், எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு, ஆதரவு காட்டுவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க கட்டணம் இல்லை. ஓவியங்களை படமெடுத்து 94439 58272 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில், வரும் 9 ஆம் தேதிக்குள் பெயா், முகவரி, பள்ளி, கல்லூரி பெயருடன் அனுப்பவேண்டும்.
நடுவா் குழு தோ்வு செய்யும் 20 ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பரிசளிப்பு இடம், நேரம் குறித்து பங்கேற்பாளா்களுக்கு தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு இபோ் (96299 91097), ஓவிய ஆசிரியா் முத்துக்குமாா் (94867 66875), காரைக்கால் நலவழி கல்வியாளா் முரளிதாஸ் (94437 86709) ஆகியோரை தொடா்புகொள்ளலாம்.