காரைக்காலில் மேலும் 4 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th March 2021 05:00 AM | Last Updated : 04th March 2021 05:00 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2 ஆம் தேதி 488 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு 3, காரைக்கால் நகரம் 1 என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 87,168 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,011 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,910 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 28 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 4 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவா் உள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 544 போ், முன்களப் பணியாளா்கள் 100 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், மேலும் 88 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 38 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.