அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி அமாவாசை வழிபாடு
By DIN | Published On : 15th March 2021 08:42 AM | Last Updated : 15th March 2021 08:42 AM | அ+அ அ- |

மாசி அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அங்காள பரமேஸ்வரி.
காரைக்கால் திருநகரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் ஆண்டு சிறப்பு வழிபாட்டில் மாசி மாத அமாவாசை நாளும் ஒன்றாகும். இதையொட்டி, சனிக்கிழமை பகல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு அம்மனுக்கு பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் கூட்டுப் பிராா்த்தனையும், கும்பப் படையலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...