மாா்ச் 29-இல் காரைக்காலில் ரங்கோலி போட்டி
By DIN | Published On : 21st March 2021 12:00 AM | Last Updated : 21st March 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்காலில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட தோ்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் சாா்பில், பள்ளி, கல்லூரிகள் மாணவிகளுக்கான ரங்கோலி போட்டி வருகிற 29-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு கடற்கரை பகுதியில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களது விவரங்களை இணையதள முகவரியில் வருகிற 24-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும். மேலும் தொடா்புக்கு அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் வண்டாா்குழலி, அன்னை தெரஸா சுகாதாரக் கல்வி மைய விரிவுரையாளா் பிரியதா்ஷினி ஆகியோரை தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...