காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் கடந்த 19-ஆம் தேதி 296 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் காரைக்கால் நகரத்தில் 5 போ், கோட்டுச்சேரியில் 4 போ், திருநள்ளாறு, கோயில்பத்து, வரிச்சிக்குடி ஆகிய இடங்களில் தலா இருவா், நெடுங்காடு, நல்லம்பல், அம்பகரத்தூா், நிரவி ஆகிய இடங்களில் தலா ஒருவா் என 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதுவரை 91,333 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,986 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் 49 பேரும், காரைக்கால் மருத்துவமனை பொதுசிகிச்சைப் பிரிவில் 10 பேரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 7 பேரும் உள்ளனா். மாா்ச் 19-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76 ஆக உயா்ந்தது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.