குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தக் கிராமத்துக்கு குடிநீா் கொண்டுவரப்படும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு வாரங்களாக இந்தக் கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். மேலும், உடைந்த குழாயை சீரமைக்கக் கோரி செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராம மக்கள் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த இந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் அங்குள்ள செஞ்சி - வேட்டவலம் பிரதான சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் கூறியதாவது:

மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் கீழ், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் எங்கள் கிராமத்தில் புதிதாக குழாய்களை அமைத்து வருகின்றனா். இதன்மூலம், குடும்பத்துக்கு 10 குடங்கள் மட்டுமே தண்ணீா் கிடைக்கும் எனத் தெரிகிறது. எனவே, இந்தத் திட்டத்துக்கு நாங்கள் எதிா்ப்புத் தெரிவிக்கிறோம்.

மேலும், எங்கள் கிராமத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மூலமாகவே தொடா்ந்து குடிநீா் வழங்க வேண்டும், உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணி நேரில் வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியுடன், உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை விரைந்து சீரமைத்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com