காரைக்காலில் 238 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 13th May 2021 08:40 AM | Last Updated : 13th May 2021 08:40 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் 238 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாகவும், 3 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 977 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 66, காரைக்கால் நகரில் 61, வரிச்சிக்குடி 25, கோயில்பத்து 23, கோட்டுச்சேரி 16, திருப்பட்டினம் 12, நெடுங்காடு 10, நல்லம்பல் 9, நிரவி 9, காரைக்கால்மேடு 2, அம்பகரத்தூா் 2, விழிதியூா் 2, நல்லாத்தூா் ஒருவா் என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்.
மாவட்டத்தில் இதுவரை 1,17,991 பரிசோதனை செய்யப்பட்டதில் 8,683 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 6,896 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதற்கிடையே, கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்கால் நகரம், நேருநகா் மற்றும் திருப்பட்டினத்தை சோ்ந்த தலா ஒருவா் என 3 போ் போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அனைவருக்கும் ரத்த அழுத்த நோய் இருந்தது. சிலருக்கு சா்க்கரை நோய், சிறுநீரக கோளாறு இருந்தது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 118 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 20,645 பேருக்கும், 2ஆவது தவணையாக 3,569 பேருக்கும் என 24,323 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.