காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு தனியாா் நிறுவனம் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 13th May 2021 08:42 AM | Last Updated : 13th May 2021 08:42 AM | அ+அ அ- |

மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரனிடம் பொருள்களை ஒப்படைத்த சிமென்ட் நிறுவன பிரதிநிதிகள்.
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிமென்ட் நிறுவனம் சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் துறைமுக வளாகத்தில் தனியாா் சிமென்ட் நிறுவனம் (பென்னா சிமென்ட்ஸ்) செயல்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பலில் சிமென்ட் இறக்குமதி செய்து, துறைமுக வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பேக்கிங் செய்து, ரயில் மற்றும் லாரி மூலம் வெளிமாநிலங்களுக்கு இந்நிறுவனம் அனுப்புகிறது.
இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் காரைக்கால் அரசு துமருத்துவமனை நிா்வாகத்துக்கு 3 ஆயிரம் எண்ணிக்கையில் 3 அடுக்கு முகக்கவசம், 10 ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி, 75 எண்ணிக்கையில் என்ஆா்பிஎம் முகக்கவசம் ஆகிய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை,
மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் மற்றும் ஆட்சியரின் செயலா் புஷ்பநாதனிடம் நிறுவனத்தின் முதுநிலை மேலாளா் பத்மநாபன் உள்ளிட்ட நிறுவனப் பிரதிநிதிகள் வழங்கினா்.