காரைக்கால் மாவட்ட பாமக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில், மாவட்ட பாமக செயலாளா் க.தேவமணி கடந்த 22-ஆம் தேதி இரவு மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை தொடா்பாக திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த மணிமாறன் (28), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கலியமூா்த்தி (59), மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பூா் பகுதியை சோ்ந்த ராமச்சந்திரன் (54), மயிலாடுதுறை கூட்டுறவு நகரைச் சோ்ந்த அருண் (31), மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த சாா்லஸ் (எ) சரண்ராஜ் (37), பாரதி (எ) அம்மாயி, ராஜேஷ்குமாா் (எ) கொத்தப்பு (33) ஆகிய 7 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா்.
இந்நிலையில், கொலைக்கான சதித் திட்டத்தில் தொடா்பிருப்பதாக மணிமாறனின் தாயாா் நவமணி (56), கலியமூா்த்தியின் மகன்கள் பிரபாகரன் (28), குரு ஜிந்தா (26) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தேவமணி கொலை வழக்கில் இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.