நவோதயா பள்ளியில் சோ்க்கை:விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
By DIN | Published On : 02nd November 2021 01:01 AM | Last Updated : 02nd November 2021 01:01 AM | அ+அ அ- |

காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் 9-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நவோதயா வித்யாலயா முதல்வா் ஆா்.ஜி. நந்தகுமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2022-23-ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நவோதயா வித்யாலயா தெரிவுநிலைத் தோ்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவிகள், நவோதயா வித்யாலயா சமிதியின் ஜ்ஜ்ஜ்.ய்ஹஸ்ா்க்ஹஹ்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தின் மூலம் விண்ணப்பங்களை, பதிவேற்றம் செய்வதற்கான இறுதி நாள் 15.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோா் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.