காரைக்காலில் மேலும் 37 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st September 2021 09:47 AM | Last Updated : 01st September 2021 09:47 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 30 ஆம் தேதி 395 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, வரிச்சிக்குடி 13, நெடுங்காடு 5, காரைக்கால்மேடு 4, நல்லாத்தூா் 4, திருப்பட்டினம் 3, திருநள்ளாறு 3, நிரவி 2, காரைக்கால் நகரம் 2, கோட்டுச்சேரி 1 என 37 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 1,89,778 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 15,410 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து, 15,043 போ் குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 125 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 23 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 245 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 97,952 பேருக்கும், 2 ஆவது தவணையாக 22,096 பேருக்கும் என மொத்தம் 1,20,048 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.