கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்:அரசு ஊழியா்கள் முடிவு
By DIN | Published On : 02nd September 2021 09:55 PM | Last Updated : 02nd September 2021 09:55 PM | அ+அ அ- |

நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அரசு ஊழியா்கள் முடிவு செய்துள்ளனா்.
காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன நிா்வாகக் குழு கூட்டம் சம்மேளன அலுவலகத்தில், தலைவா் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
கடந்த 18 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கவேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த ஊழியா்களுக்கு 15 லட்சத்திற்கு குறையாமல் இழப்பீடு வழங்கவேண்டும். 1.1.2016 முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 7-ஆவது ஊதியக் குழு நிலுவை தொகையை வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காரைக்கால், பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக அலுவலக வளாகம் மற்றும் வேளாண் கல்லூரி அலுவலக வளாகம் ஆகிய இரு இடங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.