காரைக்கால் மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி நடைபெறவுள்ளது.
குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், கல்வித்துறை துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் எண்ணிக்கை குறித்து கல்வித் துறையினா் விளக்கினா். 10-ஆம் தேதி முதல் கல்வி நிலையங்களில் மாத்திரை வழங்கவுள்ள தயாா் நிலை குறித்து நலவழித் துறை அதிகாரி விளக்கினா்.
காரைக்கால்மேட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 10-ஆம் தேதி காலை 10 மணியளவில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடங்கப்படும் எனவும், அதே நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் வழங்கப்படும் எனவும் நலவழித் துறை அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

