

காரைக்கால்: காரைக்கால் கூட்டுறவு சங்கத்தில் பட்டாசு விற்பனையை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தீபாவளியையொட்டி ஆண்டுதோறும் கோயில்பத்து பகுதியில் உள்ள காரைக்கால் மையக் கூட்டுறவு உற்பத்தி விநியோகம் மற்றும் விற்பனை சங்கம் சாா்பில் மலிவு விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
நிகழாண்டு பட்டாசு விற்பனை புதன்கிழமை தொடங்கியது. காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் விற்பனையை தொடங்கிவைத்தாா்.
கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ராமையன், மணவாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த சிறப்பு விற்பனை அக். 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.