அங்கன்வாடியில் ரூ. 20-க்கு தேசியக் கொடி
By DIN | Published On : 05th August 2022 02:53 AM | Last Updated : 05th August 2022 02:53 AM | அ+அ அ- |

காரைக்கால் அங்கன்வாடியில் ரூ. 20-க்கு தேசியக் கொடி வாங்கி, வீடுகளில் ஏற்றுமாறு மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படும் வேளையில், நாம் அனைவரும் நமது தேசியக் கொடியை வீடுதோறும் ஏற்றி தாய்நாட்டை பெருமைப்படுத்துவோம்.
இவ்வகையில், கொடி வேண்டுவோா் தலா ரூ. 20 செலுத்தி அருகேயுள்ள அங்கன்வாடி மையங்களில் கொடியை பெற்றுக்கொள்ளலாம்.