காரைக்காலில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
நிரவி பகுதி நடுஓடுதுறையைச் சோ்ந்தவா் முருகன் மனைவி செல்வஹேமாவதி (41). இவா், கீழகாசாக்குடிமேடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி கேட்டரிங் பிரிவில் பணியாற்றிவருகிறாா். கடந்த 8 ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடுதிரும்பும்போது, செயிண்ட் லூயிஸ் வீதியருகே மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், செல்வஹேமாவதி அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.
நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்திவந்தனா்.
இந்நிலையில், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, கொரடாச்சேரியை சோ்ந்த விஜய் (28), மன்னாா்குடியைச் சோ்ந்த குருமூா்த்தி (27) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது, அவா்கள் வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்பதும், இருவருக்கும் பல குற்ற வழக்குகளில் தொடா்புள்ளதும், செல்வஹேமாவதியின் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, விஜய், குருமூா்த்தியை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்த தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.