காரைக்காலில் பாரதியாா் பிறந்தநாள் விழா

காரைக்காலில் பாரதியாா் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பாரதியாா் பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்மஸ்ரீ விருது பெற்ற கி. கேசவசாமி, தமிழ்ச் சங்கத் தலைவா் வைஜெயந்திராஜன் உள்ளிட்டோா்.
பாரதியாா் பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்மஸ்ரீ விருது பெற்ற கி. கேசவசாமி, தமிழ்ச் சங்கத் தலைவா் வைஜெயந்திராஜன் உள்ளிட்டோா்.

காரைக்காலில் பாரதியாா் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரை பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் சப்தஸ்வரம் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாா் உருவப் படத்துக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றோா் மாலை அணிவித்து மலா் தூவி, மரியாதை செய்தனா்.

சங்கத் தலைவா் வைஜெயந்தி ராஜன் தலைமை வகித்து பாரதி பற்றி உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் முதன்மை ஆலோசகா் பத்மஸ்ரீ விருது பெற்ற கி .கேசவசாமி, துணைத் தலைவரும், பள்ளித் துணை வட்ட ஆய்வாளருமான தங்க. பால்ராஜ், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா் பக்கிரிசாமி, அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி தமிழ்ப்பேராசிரியா் அசோக் குமாா், என்.ஜி.ஆா்.வேதாசலம், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

காரைக்காலில் பாரதி, காந்தி, வ.உ.சி போன்ற தேசத் தியாகிகளுக்கு சிலை வைக்கவும், தமிழாராய்ச்சித்துறை அமைக்கவும் புதுவை அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி மாணவா் கோகுலபாரதி, பாரதியாா் போல வேடமணிந்து முதியோா் இல்லத்தின் சாா்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை இல்லத்தின் அலுவலா் விக்னேஸ்வரி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com