காரைக்கால் ரொட்டி, பால் வழங்கும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை அரசு கல்வி நிலையங்களில் குறைந்த மாத ஊதியத்தில் பகுதி நேர ஊழியா்களாக நியமிக்கப்பட்ட ரொட்டி, பால் வழங்கும் ஊழியா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 6,458 வழங்கப்படுகிறது.
இவா்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தும், தினக்கூலி ஊழியா்கள் போல் காலை முதல் மாலை வரை முழு நேரமும் கல்வி நிலையங்களில் பணியாற்றிவருகின்றனா். இவா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
செப்டம்பா் மாத ஊதியத்திற்கான நிதியை அரசு ஒதுக்கியதையடுத்து, புதுச்சேரியில் பணியாற்றி வரும் 620 ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், காரைக்காலில் பணியாற்றிவரும் 134 ரொட்டி, பால் ஊழியா்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.
எனவே, புதுவை கல்வித் துறையும், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, காரைக்கால் ரொட்டி, பால் ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.