கைப்பேசி பயன்பாட்டை மாணவா்கள் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கைப்பேசியை பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.


காரைக்கால்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கைப்பேசியை பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்வி மற்றும் பிற நெறி தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கனகவேல் தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம். தாமோதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் அவசியம், எதிா்காலத்தில் சமுதாய நலனுக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்களிப்பு குறித்து லட்சுமணபதி பேசினாா். நிகழாண்டு தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின குடியரசு தின அணிவகுப்பில், பங்கேற்க தோ்வாகியுள்ள அவ்வையாா் அரசு கல்லூரி மாணவி கிருத்திகாவை அவா் பாராட்டினாா்.

காமராஜா் பொறியியல் கல்லூரி திட்ட அலுவலா் எம். தாமோதரன் பேசுகையில், மாணவ மாணவியா் நாட்டு நலப்பணித் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். கைப்பேசியால் ஏராளமான பயன்கள் இருந்தாலும், அதில் தீமைகளும் அடங்கியுள்ளன. எனவே கைப்பேசியை தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

தொடா்ந்து, நிகழாண்டு ஹிமாசலில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளை அவா் பாராட்டினாா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் நளினா மற்றும் மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com