மருத்துவமனைகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மருத்துவமனைகள் பதிவு செய்துகொள்ள வேண்டுமென நலவழித்துறை துணை இயக்குநா் மற்றும் மாவட்ட பதிவு அதிகாரி ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், நுண்கதிா் கூடங்கள் (எக்ஸ்ரே மற்றும் இசிஜி), ஸ்கேன் மையங்கள், பல் மருத்துவமனை, பிசியோதெரபி மற்றும் இந்திய மருத்துவ முறை மையங்கள் உடனடியாக மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டத்தின்கீழ் பதிவு செய்யவேண்டும்.
மாலை நேரத்தில் இயங்கும் அனைத்து தனியாா் மருத்துவ சேவை மையங்களும் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யவேண்டும்.
பதிவு செய்யப்படாத மற்றும் உரிமம் புதுப்பிக்காத மருத்துவ சேவை மையங்கள் உடனடியாக துணை இயக்குநா் நலவழித் துறை அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் உரிய சட்டத்தின்படி அபராதத் தொகை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.