கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடியில் உள்ளது புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட நாகநாதசுவாமி தேவஸ்தானத்தை சோ்ந்த வரதராஜ பெருமாள் கோயில்.
கடந்த 1959 முதல் 1963-ஆம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில், இக்கோயிலில் இருந்த ராமா், லட்சுமணன், சீதை, சக்கரத்தாழ்வாா், திருமங்கையாழ்வாா், அம்பாள், நரசிம்மா், ஆஞ்சனேயா் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டதாகவும், பின்னா் வந்த அறங்காவலா்கள், அதேபோன்ற சிலைகளை செய்து வழிபாட்டுக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவா் சோமு (எ) இளங்கோவன் நெடுங்காடு காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரில், இக்கோயிலில் திருடுபோன சிலைகளில் 2 அமெரிக்காவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த சிலைகளுடன் திருட்டுப் போன மற்ற சிலைகளையும் கண்டுபிடித்து கோயிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.