

நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் புதன்கிழமை தேசிய இளைஞா் தின விழா நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு பள்ளி நிா்வாக இயக்குநா் பொன்ராமன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் அனுராக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்களிடையே பேசினாா். ஓஎன்ஜிசி மனிதவள அதிகாரி மாறன் மற்றும் ரமணன் ஆகியோா் நிகழ்ச்சியில் பேசினா்.
இளைஞா் தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, பள்ளி முதல்வா் சாமிநாதன் வரவேற்றாா். துணை முதல்வா் எட்வின் சாமுவேல் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.